ADDED : மே 25, 2010 11:15 PM
பாலக்காடு : கண்ணம்பிரா பகவதி கோவிலில் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.
பாலக்காடு வடக்கச்சேரியில் குறும்ப பகவதி கோவில் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சந்தன அபிஷேகம், அலங்கார பூஜை, பஞ்சாரி மேளத்துடன் காழ்ச்ச சீவேலி கோவில் வளாகத்தில் நடந்தது. 11.30 மணிக்கு ஈட்டுவெடி, உஷ பூஜை, உச்சிக்கால பூஜை, நிறமாலை தரிசனம், நிவேத்திய பூஜை ஆகியவை நடந்தன. தங்கமுக காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மாலை 4.00 மணிக்கு 14 யானைகள் அலங்கார அணிவகுப்புடன் பஞ்சவாத்யங்கள் முழங்க கேரளாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் அம்மன் பவனி வந்தார். மாலை 5.00 மணிக்கு ஏழு யானை ஊர்வலம் நடந்தது. இரவு 9.00 மணிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு பஞ்சவாத்தியம், தாயம்பகயும் மற்றும் வாணவேடிக்கையும் நடந்தன.